ஐபிஎல் ஏழாவது சீசனில் நடந்த ஏலத்தில் யுவராஜ்சிங்கை பெங்களூர் அணி 14 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
சமீபத்தில் ஐபிஎல் ஏழாவது சீசனுக்கான வீரர்களின் ஏலம் நடந்தது, இதில் கடந்த தொடர்களில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங்கை பெங்களூர் அணி ரூ.14 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
இதுகுறித்து பஞ்சாப் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியது, ஆல்–ரவுண்டர் யுவராஜ் சிங்கை மீண்டும் பஞ்சாப் அணிக்காக தெரிவு செய்ய முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது.
பெங்களூர் அணி நிர்வாகம் அதிக விலை கொடுத்து வாங்கியதால், பஞ்சாப் அணியால் வாங்க முடியாமல் போனது.
யுவராஜ் இல்லாத பஞ்சாப் அணியை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை, இருப்பினும் பெங்களூர் அணிக்காக சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்.
இந்த முறை பஞ்சாப் அணியில் திறமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர், அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சனை தெரிவு செய்தது கூடுதல் பலம்.
இவர் தவிர ஷான் மார்ஷ், ஜார்ஜ் பெய்லி, மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், புஜாரா என சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இடம் பெற்றிருப்பது அணியை வலுப்படுத்தி உள்ளதென தெரிவித்துள்ளார்.
14 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணிக்கு தாவிய யுவராஜ்
