2014 ஆசியக் கிண்ணம் இலங்கை வசம்

2014ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி தன்வசப்படுத்தியுள்ளது. 



பங்களாதேஷில் நடைபெற்ற ஆசியக் கிண்ண போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

ஆரம்ப துடிப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வௌியேற தடுமாற்றத்தை எதிர்நோக்கிய பாகிஸ்தான் அணியை, மிஸ்பா உல்ஹக் மற்றும் பவட் அலாம் ஜோடி வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர். 

பின்னர் மிஸ்பா உல்ஹக் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கிய உமர் அக்மல் 42 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 59 ஓட்டங்களை விளாசினார். 

50 ஓவர்கள் நிறையில் 5 விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான் அணி 260 ஓட்டங்களைக் குவித்தது. 

இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய லசித் மலிங்க 5 விக்கெட்டுக்களை சாய்த்தார். 

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. 


Create a website for free Webnode