24 இந்திய மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு

24 இந்திய மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.
 
கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி ,  மாதகலுக்கு அண்மித்த கடற்பரப்பில் 4 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்கள், செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி எரிபொருள் தீர்ந்த நிலையில் ஒரு படகுடன் நெடுந்தீவில் கரையொதுங்கிய 4 இந்திய மீனவர்கள் மற்றும் கடந்த 7ஆம் திகதி கச்சதீவு பகுதியில் கரையொதுங்கிய படகிலிருந்து 4 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
                                                                                                               
இதன்போது,  யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினூடாக 16 மீனவர்களும்   நெடுந்தீவு பொலிஸாரினால் 8 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.