261 ஓட்டங்களைப் பெற்றால் இலங்கைக்கு ஆசியக் கிண்ணம்

ஆசியக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் 261 என்ற கடினமாக வெற்றியிலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி. 

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

ஆரம்ப துடிப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வௌியேற தடுமாற்றத்தை எதிர்நோக்கிய பாகிஸ்தான் அணியை, மிஸ்பா உல்ஹக் மற்றும் பவட் அலாம் ஜோடி வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர். 

பின்னர் மிஸ்பா உல்ஹக் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கிய உமர் அக்மல் 42 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 59 ஓட்டங்களை விளாசினார். 

50 ஓவர்கள் நிறையில் 5 விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான் அணி 260 ஓட்டங்களைக் குவித்தது. 

பவட் அலாம் ஆட்டமிழக்காது 114 ஓட்டங்களுடனும், சகிட் அப்ரிடி ஓட்டம் எதுவும் பெறாத நிலையிலும் களத்தில் இருந்தனர். 

இந்தப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பவட் அலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில், தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்தார். 

இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய லசித் மலிங்க 5 விக்கெட்டுக்களை சாய்த்தார்.


Create a free website Webnode