265 ஓட்டங்கள் பெற்றால் இலங்கைக்கு வெற்றி!

265 ஓட்டங்கள் பெற்றால் இலங்கைக்கு வெற்றி!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது. 

இந்திய அணி சார்பில் தவான் 94 ஓட்டங்களையும் கோலி 48 ஓட்டங்களையும் பெற்றனர். 

இலங்கை சார்பில் பந்துவீச்சில் மெண்டிஸ் 04 விக்கெட்களையும் சேனாநாயக்க 03 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

போட்டியில் வெற்றிபெற இலங்கை அணி 265 ஓட்டங்களைப் பெற வேண்டும்.