5,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் மண்டை ஓடு கண்டு பிடிப்பு

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மால்டா தீவுகளில் 5,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் மண்டை ஓடு தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த டுன்டி பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 5,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, "நியோலிதிக்´ மனித மண்டை ஓட்டை மால்டா தீவுகளிலிருந்து கண்டெடுத்துள்ளனர். 

இவர்கள், தங்களின் ஆராய்ச்சியின் மூலம் இந்த மண்டை ஓட்டிற்கு கணினியில் முக அமைப்பை உருவாக்கியுள்ளனர். 

இதன் மூலம் அந்த மண்டை ஓடு ஒரு பெண்ணுக்குரியது என்றும் அப்பெண் 30 முதல் 40 வயதிற்குள் இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.