தடைசெய்யப்பட்ட தங்கூசி வலை எரித்த; மண்டைதீவு மீனவர்கள்

தடைசெய்யப்பட்ட தங்கூசி வலை எரித்த; மண்டைதீவு மீனவர்கள்

தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என கூறி ஒரு கோடி பெறுமதியான வலைகளை மண்டைதீவு மீனவர்கள் தாமாக முன்வந்து எரித்துள்ளனர். 

இலங்கையில் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

இந் நிலையில் மண்டைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 150 அங்கத்தவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்திற்கு வருகை தந்ததுடன் இன்றில் இருந்து தங்கூசி வலைகளைப் பயன்படுத்த மாட்டோம் என கையெழுத்து இடப்பட்ட கடிதம் ஒன்றினை கையளித்தனர்.   

இதன்படி  யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி முன்னிலையில் மண்டைதீவு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு முன்பாக வைத்து தங்கூசி வலைகள் மீனவர்களால் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.